செய்திகள்

முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் ஹூன்டாய் வெர்னா

Published On 2017-09-01 15:59 IST   |   Update On 2017-09-01 16:00:00 IST
ஹூன்டாய் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை வெர்னா மாடல் காரினை ஆகஸ்டு மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

ஹூன்டாய் மோட்டார் இந்தியா ஐந்தாவது தலைமுறை வெர்னா மாடலினை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய வெர்னா இதுவரை முன்பிதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுகமான நாள் முதல் சுமார் 70,000க்கும் அதிகமானோர் புதிய வெர்னா வாங்க முன்வந்ததோடு இதுவரை 7,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர்.

தீபாவளிக்கு முன் இந்தியாவில் 10,000 யுனிட்களை விற்பனை செய்ய ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஹூன்டாய் தனது இலக்கை அடைந்துவிடும். அறிமுகமான பத்து நாட்களில் புதிய வெர்னாவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஐந்தாம் தலைமுறை ஹூன்டாய் வெர்னா நுட்பமான வடிவமைப்பு கொண்ட சூப்பர் செடான் மாடல் என ஹூன்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை செய்ல் அதிகாரியான வை.கே. கூ தெரிவித்தார்.  



இந்தியாவில் 2017 வெர்னா, ஹூன்டாய் நிறுவனத்தின் மாத இலக்கை விட நான்து மடங்கு அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன் 10,000 யுனிட்களை விநியோகம் செய்ய உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய தலைமுறை வெர்னா K2 பிளாட்ஃபார்ம் சார்ந்து வடிவமைக்கப்பட்டு ஃப்ளூயிடிக் 2.0 டிசைன் கொண்டுள்ளது. இதன் இன்டீரியர் பெய்கீ மற்றும் பிளாக் என டூயல்-டோன் கலர் கொண்டுள்ளது. இதன் சீட்கள் லெதர் மற்றும் சாதாரான துணி என வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வழங்கப்படுகிறது. இத்துடன் 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது.



இத்துடன் மிரர்லின்க் மற்றும் ஹூன்டாய் ஐப்ளூ ஆடியோ ஸ்மார்ட்போன் ஆப், 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களில் சாதாரண அலாய் அல்லது ஸ்டீல் அலாய் வழங்கப்பட்டது. மேலும் புதிய தலைமுறை க்ரூஸ் கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட், சன் ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.   

ஐந்தாம் தலைமுறை வெர்னா 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 121 bhp, 151 Nm பீக் டார்கியூ மற்றும் டீசல் இன்ஜின் 126 bhp, 260 Nm பீக் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்கியூ வழங்கப்பட்டுள்ளது.

Similar News