செய்திகள்

ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல்களில் 'ஐ கிரியேட்' வசதி அறிமுகம்

Published On 2017-08-27 15:18 IST   |   Update On 2017-08-27 15:18:00 IST
இந்தியாவில் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல்களில் ஐ கிரியேட் எனும் கஸ்டமைஸ் வசதியை மாருதி சசுகி அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்ய முடியும்.
புதுடெல்லி:

மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் மாடல் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் கார் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஐ கிரியேட் எனும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் விடாரா பிரெஸ்ஸா மாடலில் வழங்கப்பட்ட ஐ கிரேயேட் அம்சம் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய உள்புற மற்றும் வெளிப்புற கஸ்டமைசேஷன் அம்சங்களை வழங்குகிறது. ஆன்லைன் மற்றும் சர்வீஸ் மையங்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய 120 கஸ்டமைசேஷன் அம்சங்கள் வழங்கப்படுகிறது.

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ரூஃப் ராப், ஹூட் கிராஃபிக் ஆப்ஷன்கள், ஸ்டிரைக்கிங் பாடி ஸ்டைலிங் கிட், ஸ்பாயிலர்கள், அலாய் வீல் உள்பட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் இன்டீரியர் அம்சங்களில் ஃபிளாக்கிங் கிட் பல்வேறு நிறங்களில் வழங்கப்படுகிறது. ஸ்டைலிங் கிட் மற்றும் புதிய ரக சீட் கவர்களும் இன்டீரியர் அம்சங்களில் வழங்கப்படுகிறது.



புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது. 2005-ம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட், தற்போதைய ஹேட்ச்பேக் மாடல் 2011-ம் ஆண்டு அறிமுகமானது. இந்தியாவில் ஸ்விஃப்ட் மாடல்கள் அறிமுகமானது முதல் இதுவரை 15 லட்சம் யுனிட்களை மாருதி சுசுகி விற்பனை செய்துள்ளது. 

2016-17 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1.66,885 ஸ்விஃப்ட் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இதில் ஏப்ரல் - ஜூலை 2017 நரை மட்டும் 63,974 யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் போது 25.5 சதவிகிதம் வரை அதிகம் ஆகும்.

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் புதிய தலைமுறை மாடல் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து, ஐ கிரியேட் வசதி கொண்ட ஸ்விஃப்ட் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News