வணிகம் & தங்கம் விலை

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. விழி பிதுங்கும் முதலீட்டாளர்கள்!

Published On 2025-02-24 11:39 IST   |   Update On 2025-02-24 11:39:00 IST
  • நிஃப்டி 165 புள்ளிகள் (0.73 சதவீதம்) வீழ்ச்சியுடன் தொடங்கி
  • ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன

வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 24) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

இன்று காலை 9.15 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 536.05 புள்ளிகள் (0.71 சதவீதம்) சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 74,775 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 165 புள்ளிகள் (0.73 சதவீதம்) வீழ்ச்சியுடன் தொடங்கி 22,630 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஐடிசி, சன் பார்மா, மாருதி, சிப்லா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன.

கோட்டக் மஹிந்திரா,ஆக்சிஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயிண்ட், டைட்டன், ஹிந்துஸ்தான் லீவர், ஹீரோ மோட்டார்ஸ், பிரிட்டானியா, டாடா ஸ்டீல், அப்பல்லோ மருத்துவமனை பங்குகள் சரிவில் உள்ளன.

Tags:    

Similar News