ஐ.பி.எல்.(IPL)
செங்கல்பட்டு தொகுதி

செங்கல்பட்டு தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-25 14:43 IST   |   Update On 2021-03-25 14:43:00 IST
அ.தி.மு.க. சார்பில் கஜேந்திரன், தி.மு.க சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், அ.ம.மு.க. சார்பில் சதீஷ்குமார் களத்தில் உள்ளனர்.
வாக்காளர்கள்- 4,26,535
ஆண்கள்- 2,09,611
பெண்கள்- 2,16,868
மூன்றாம் பாலினம்- 56

அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 20,000
2. அசையும் சொத்து- ரூ. 1,99,07,777
3. அசையா சொத்து- ரூ. 25860640

திமுக வேட்பாளர் வரலட்சுமி சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 1,50,000
2. அசையும் சொத்து- ரூ. 85,32,527
3. அசையா சொத்து- ரூ. 11,97,22,822

பன்னாட்டு தொழிற்சாலைகள் அடங்கிய தொழில் வளம் மிக்க தொகுதி செங்கல்பட்டு. மகேந்திரா வேல்டு சிட்டி, மறைமலைநகர் தொழில் பேட்டை என பல்வேறு தொழிற்சாலைகள் இங்கு நிறைந்துள்ளன. இதன் புதிய மகுடமாக வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.



1957-ம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதி உருவானது. காஞ்சீபுரம் மாவட்டம் அமைவதற்கு முன்பு செங்கல்பட்டு நகரை தலைமை இடமாக கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. 2019-ல் இருந்து மீண்டும் செங்கல்பட்டை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.



கார் உற்பத்தி தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவு நிறைந்திருக்கின்றன. செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பாலாறு பாயும் இடங்களில் அதிக அளவு விவசாயம் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் வன்னியர், முதலியார், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவு உள்ளனர்.



செங்கல்பட்டு நகரத்திற்கு பொழுது போக்கு பூங்கா, பாதாள சாக்கடைத் திட்டம், செங்கல்பட்டு நகர சாலை விரிவாக்கம், கொளவாய் ஏரி படகு போக்குவரத்து சுற்றுலாத்தளம் அமைத்தல் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. தொகுதிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோயில் போன்ற இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.

கடந்த 1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில், தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், பா.ம.க. 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும், தே.மு.தி.க. 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.



செங்கல்பட்டு தொகுதியில் கால்நடை ஆராய்ச்சி மருத்துவமனை, பெண்கள் கலை மற்றும் அறிவியில் கல்லூரி அமைக்க வேண்டும். சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் புறவழிச் சாலையில் செங்கல்பட்டில் நிற்காமல் கடந்து செல்கிறது.



புறவழிச்சாலையில் பேருந்து நிலையம் அமைத்து பேருந்துகள் நின்று செல்ல உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

ஒரு பக்கம் தொழில்கள் நிறைந்து இருந்தாலும் விவசாயமும் இந்த தொகுதியில் அதிகமாக நடைபெறுகிறது. ஆனால் நீராதாரம் மேம்பாடு இல்லை. இதற்கு உரிய தீர்வுகளை காணவேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.



1957- முத்துசாமி நாயக்கர் (காங்கிரஸ்)
1962- சி.ஜி. விஸ்வநாதன் (தி.மு.க.)
1967- சி.ஜி. விஸ்வநாதன் (தி.மு.க.)
1971- சி.ஜி. விஸ்வநாதன் (தி.மு.க.)
1977- ஆனூர் ஜெகதீசன் (அ.தி.மு.க.)
1980- ஆனூர் ஜெகதீசன் (அ.தி.மு.க.)
1984- ஆனூர் ஜெகதீசன் (அ.தி.மு.க.)
1989- வீ. தமிழ்மணி (தி.மு.க.)
1991- சே.து. வரதராஜன் (அ.தி.மு.க.)
1996 - வீ. தமிழ்மணி (தி.மு.க.)
2001 - கே.ஆறுமுகம் (பா.ம.க)
2006 - கே.ஆறுமுகம் (பா.ம.க)
2011 - அனகை முருகேசன் (தே.மு.தி.க.)
2016 - வரலட்சுமி மதுசூதனன் (தி.மு.க.)

Similar News