செய்திகள்

டாஸ்மாக் அரக்கனை ஒழித்து பெண்களை காப்பாற்றுவேன்: பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை

Published On 2016-05-05 09:04 GMT   |   Update On 2016-05-05 10:54 GMT
டாஸ்மாக் அரக்கனை ஒழித்து பெண்களை காப்பாற்றுவேன் என்று விருகம்பாக்கம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரத்தின் போது பேசினார்.

சென்னை:

பாரதீய ஜனதா தமிழக தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரி முதல்வரை சந்தித்தார். அப்போது பாரதிதாசன் குடி யிருப்பு பகுதி மக்களின் கோரிக்கை மனுவை நிறை வேற்ற வற்புறுத்தியதோடு மத்திய தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா நடவடிக்கை எடுக்க அவருக்கு கடிதம் அனுப்பினார்.

மேலும் தமிழிசை குடியிருப்பு பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தபோது, “கடந்த 5 ஆண்டுகளாக அ.தி. மு.க. அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டதால், பெண்களின் வாழ்க்கை இருண்டு விட்டது. வீட்டில் குடிகாரர்களின் தொல்லையால் பல கொலைகளும், தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.

பெண்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.க. அரசை வீட் டுக்கு அனுப்புவோம். கல்லூரி மாணவர்கள் தொடங்கி, பள்ளி மாணவர்கள் வரை பலரும் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள்.

என்னை நீங்கள் தேர்வு செய்தால் மது என்னும் அரக்கனை உடனடியாக ஒழித்துக் கட்டுவேன். பெண்கள் நிம்மதி யோடு வாழ அனைத்து நட வடிக்கைகளை எடுப்பேன்” என்று பேசினார்.

Similar News