செய்திகள்
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மறுமலர்ச்சி ஏற்படுத்தும்: எர்ணாவூர் நாராயணன் அறிக்கை
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை:
சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்போவது உறுதி. கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி. 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர்க்கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்த இருப்பது.
மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் முடிவு. கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இருப்பது. தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது. வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு போன்ற அறிவிப்புகள் மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மேற்சொன்ன பலன்களை எல்லாம் தமிழக மக்கள் பெறுவதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.