செய்திகள்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மதுரவாயல் தொகுதியில் இன்று பிரசாரம்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மதுரவாயல் தொகுதியில் இன்று பிரசாரம் செய்கிறார்.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் இன்று(சனிக்கிழமை) தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் இணைந்து சென்னை தீவுத்திடலில் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இன்று(சனிக்கிழமை) தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். மதுரை, கோவை மாவட்டத்திலும், சென்னை மதுரவாயல் தொகுதியிலும் தி.மு.க. கூட்டணிக்கு ராகுல்காந்தி வாக்கு சேகரிக்கிறார்.
நாகர்கோவிலில், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 10-ந் தேதி (செவ்வாய்கிழமை) பேரணி மூலம் ராகுல்காந்தி ஓட்டு கேட்கிறார்.