செய்திகள்

தி.மு.க. மதுவிலக்கு கொண்டு வரும் என்பது மக்களை ஏமாற்றும் செயல்: சீமான் பேச்சு

Published On 2016-04-20 15:54 IST   |   Update On 2016-04-20 18:56:00 IST
தி.மு.க. மதுவிலக்கு கொண்டு வரும் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என சீமான் பேசினார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தமிழர்களின் உரிமைகளை பெற்று தரப்போகிற தேர்தல் ஆகும். தமிழக மக்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா பணத்துக்காகவும், இலவசத்துக்காகவும் கையேந்தவிட்டார். தமிழர்களாகிய நாமும் நமது பண்பாட்டை மறந்து அவரிடம் அடிமையாகி விட்டோம். ஜெயலலிதா அதிகளவில் மதுக்கடைகளை திறந்ததால் இதுவரை 2 லட்சம் தாய்மார்கள் விதவைகளாகி இருக்கிறார்கள். எனவே அ.தி. மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழகத்தில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர். ஆனால் தற்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே தமிழகத்தில் அ.தி.மு.க–தி.மு.க. இல்லாத தமிழரின் ஆட்சி அமைய நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News