செய்திகள்

விளம்பர பேனர்கள் வைக்க அனுமதி- தமிழக சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்

Published On 2018-07-09 08:37 GMT   |   Update On 2018-07-09 08:37 GMT
விளம்பர பேனர்கள் வைப்பதற்கு அனுமதி அளிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதாவை, சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். #AdvertisingBannersBill
சென்னை:

தமிழகத்தில் விளம்பர பலகைகள் வைப்பதில் விதிமீறல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன. பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைப்பதற்கான உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கியது. ஆனால் அதை சரியாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், பேனர்களை வைக்க அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பதற்கு உரிமம் தர இந்த மசோதா வகை செய்கிறது. மேலும், விளம்பர பலகைகளை நிறுவுவதற்கான உரிமக் கட்டணத்தை உயர்த்தவும், விதிமீறல்களில் ஈடுபட்டால் தண்டனையை உயர்த்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. இந்த மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலேயே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. #AdvertisingBannersBill
Tags:    

Similar News