என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bill"
- படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரியை உயர்த்துவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள். பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்துக்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
வாகனங்களுக்கான வரியை உயர்த்தி சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வாகனங்களுக்கான புதிய வரி நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கும் மேல் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 20 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஒரு வருடத்துக்குள் உள்ள ரூ.1 லட்சத்துக்கு உள்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 8.25 சதவீதமும், ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 10.25 சதவீதமும், ஓராண்டு முதல் 2 ஆண்டுக்குள் உள்ள ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 8 சதவீதமும், ரூ.1லட்சத்துக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 10 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ் நாள் வரி அதன் விலைக்கு ஏற்ப 6 சதவீதம் முதல் 9.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
2 ஆண்டு முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் ரூ.1 லட்சத்துக்கு மேல் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட புதிய கார்களுக்கு வாழ்நாள் வரி 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களுக்கு 20 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ரூ.5 லட்சத்துக்கு கார் வாங்கினால் ரூ.60 ஆயிரம் வாழ்நாள் வரியும், ரூ.1 லட்ச த்துக்கு மோட்டார்சைக்கிள் வாங்கினால் ரூ.10 ஆயிரம் வாழ்நாள் வரியும் செலுத்த வேண்டும்.
சரக்கு வாகனங்களில் சரக்கு ஏற்றிய பிறகு 3 ஆயிரம் கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 3 ஆயிரம் கிலோ முதல் 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425 முதல் ரூ.3100 வரை எடைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு உள்ளது.
வாடகைக்கு இயக்கப்படும் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகங்களில், 35 பேர் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான காலாண்டு வரி ரூ,4,900 ஆகும். 35 பேருக்கும் அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
டிரெய்லர் வாகனங்களுக்கு ஏற்றப்படும் எடையின் அளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் 4 பேர் பயணிக்கும் வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி உயர்த்தப்படுகிறது.
கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.15 ஆயிரம், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பஸ்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்கக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஓட்டுனர் சேர்த்து 7 முதல் 13 பேர் வரை ஏற்றக் கூடிய ரூ.5 லட்சத்துக்கு உள்பட்ட புதிய சுற்றுலா சீருந்துகளுக்கான வாழ்நாள் வரி அதன் விலையில் 12 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட சீருந்துகளுக்கு 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை கொண்ட சீருந்துகளுக்கு 18 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 20 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
- காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வருகிற 30-ந் தேதியுடன் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சுமோட்டோ உள்ளிட்ட தனியார் உணவு நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன.
கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தையும் உடனடியாக எண்ணி அதில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் மொத்தம் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.
ரொக்கப்பணமாக ரூ.5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830ம், தங்கம் 1419 கிராமும், வெள்ளி 18,185 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1366-ம் கிடைத்துள்ளன. இது தவிர பட்டு, பரிவட்டம், நவதானியங்கள், வெளிநாட்டு கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன.
காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பே உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை இன்னும் 2 நாட்களில் மாற்றியாக வேண்டும் என்பதால் அங்குள்ள உண்டியல்களையும் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமக் கோவில்கள் மற்றும் சமுதாயத்துக்கு பாத்தியப்படட குலதெய்வக் கோவில்களிலும் உண்டியல்கள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- சட்டதிருத்த மசோதாக்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
- கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டதிருத்த மசோதாக்களை மத்திய அரசு உடனடி யாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு, ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று வக்கீல்கள் கோர்ட்டுகளை புறக்கணித்து விட்டு கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கும்பகோணம் தலைமை தபால் நிலையம் வந்தடை ந்தனர்.
ஊர்வலத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊர்வ லத்தை மூத்த வக்கீல் சுகுமாறன் தொடங்கிவைத்தார்.
இதில் மூத்த வக்கீல்கள் சக்கரபாணி, வைத்தியநாதன், முன்னாள் சங்க தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராஜசீனிவாசன், சசிகலா, பானுமதி, அனுராதா உள்பட திரளான வக்கீல்கள் கலந்து கொண்டு சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும்.
- கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.
கோவை:
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பாரதியாரின் கனவு இப்போது நனவாகி உள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்து உள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை.
உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்து வந்த நிலையில், தனித்துவமான நாடாக இந்தியா தற்போது உருவாகி உள்ளது.
இஸ்ரோ விண்வெளி நிறுவனத்துக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது. நாகப்பட்டினம் வரவேண்டிய விண்கல ஏவுதளம், தி.மு.க. அமைச்சர் முயற்சி செய்யாததால் ஹரிகோட்டாவிற்கு சென்றது.
2-வது விண்கல ஏவுதளத்தை குலசேகர பட்டிணத்தில் அமைக்க வேண்டிய கடமை தி.மு.க. அரசிற்கு உள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் நடைபயணம் குறித்து பொன்முடி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள் ஏ.சி. அறையில் இருந்து அரசியல் செய்கிறார்கள்.
23 நாளில் 128 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம். 234 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும் முதல் கட்சியாக பா.ஜ.க தான் இருக்கும்.
தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.
பா.ஜ.க. நடை பயணத்தால் அரசியல் புரட்சி ஏற்பட்டு உள்ளது. எனக்கு நடைபயணத்தின் போது பகவத் கீதையை விட 21 பைபிள், 7 குர்ஆன் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்தன. அவை தற்போது என் பூஜை அறையில் உள்ளது.
பா.ஜ.க.வை இந்துத்துவா கட்சி என எத்தனை நாளுக்கு சொல்ல முடியும்? பா.ஜ.க. மீதான பிம்பம் உடைந்து தற்போது அனைவருக்காகவும் உழைக்கும் கட்சியாக உள்ளது.நடைபயணத்தின்போது இஸ்லாமியர், கிறிஸ்துவர்களும் என்னுடன் நடந்து வந்தனர்.
நீட் மசோதாவில் கவர்னரின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஜனாதிபதி தான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.
ஆளுநர் தி.மு.க.வின் சவாலை ஏற்று, சொந்த மாநிலமான பீகாருக்கு வரச்சொன்னால் என்ன செய்யலாம்? வாய் உள்ளது என தி.மு.க.வினர் எல்லாவற்றையும் பேசக்கூடாது.
கவர்னரை சம்மந்தம் இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கவர்னரிடம் அதிகாரம் உள்ளது.
கவர்னருக்கும், அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து பதில் சொல்ல தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?.
காவிரி பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். அதனை இவர் தற்போது இடியாப்ப சிக்கலாக்கி ரசித்து வருகிறார்.
அனைவருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவது தி.மு.க.வின் முதல் கடமையாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதுவும் நடக்காது. காவல்துறைக்கு தான் சிரமம்.
அ.தி.மு.க மாநாடு அந்த கட்சிக்கு முக்கியமானது.மாநாடு என்றால் ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோடிக்கணக்கில் வசூல் ஆகும் உண்டியல்கள் பாதுகாப்பற்ற நிலையில் கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.
- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புதிய வடிவிலான மேற்கூரையுடன் கூடிய உறுதியான தன்மை கொண்ட லாரியை வடிவமைத்து உள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் நகை, பணம், சில்லறை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் தினமும் ரூ 3 முதல் 5 கோடி வரை வசூல் ஆகிறது. உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக புதியதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
கோவிலில் இருந்து உண்டியல்கள் சிறிய வாகனங்கள் மூலம் கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்குள்ள கிரேன்கள் மூலம் உண்டியல்கள் லாரிகளில் ஏற்றி காணிக்கை எண்ணிக்கை நடைபெரும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
கோடிக்கணக்கில் வசூல் ஆகும் உண்டியல்கள் பாதுகாப்பற்ற நிலையில் கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புதிய வடிவிலான மேற்கூரையுடன் கூடிய உறுதியான தன்மை கொண்ட லாரியை வடிவமைத்து உள்ளனர்.
காணிக்கை உண்டியல்கள் இந்த லாரியில் பாதுகாப்பான முறையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை முக்கிய அம்சமாக எதிரொலித்தது.
- ராகுல்காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்தார்.
புதுடெல்லி:
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளை சந்தித்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று (வெள்ளிக்கிழமை) 17-வது நாளுடன் நிறைவு பெற உள்ளது.
இந்த கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை முக்கிய அம்சமாக எதிரொலித்தது. கூட்டம் தொடங்கிய நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது வரை எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன.
எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்த பின்னர் நடைபெற்ற முதல் கூட்டம் என்பதால் அனைத்து பிரச்சினைகளிலும் எதிர்க்கட்சிகள் சேர்ந்தே குரல் கொடுத்தன. அதற்கு முத்தாய்ப்பாக மோடி குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் பெற்ற ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு அவர் எம்.பி. பதவியை தக்கவைத்த நிகழ்வு எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்தது.
எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் அணி திரண்டாலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறிதும் தயங்காமல் எதிர்க்கட்சிகளை எதிர்கொண்டன. காரசார விவாதங்களுக்கு மத்திய மந்திரிகள் சளைக்காமல் பதிலளித்து எதிர்க்கட்சிகளை திணறடித்தனர். மணிப்பூர் கலவர பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல் , மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், விரிவான விவாதத்திற்கு கடைசி வரையில் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இதை தொடர்ந்து எதிர்க் கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானம் மீதான விவாதம் கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்றது.
ராகுல்காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்தார். சுமார் இரண்டரை மணிநேரம் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியதும், தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகும். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
டெல்லி நிர்வாக சீர்திருத்த சட்டம் இந்த கூட்ட தொடரில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முன்னதாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ராகுல்காந்தி பங்கேற்று பேசியது, அவர் பேசி நிறைவு செய்ததும் பறக்கும் முத்தம் கொடுத்ததால் எழுந்த சர்ச்சை போன்றவையும் இந்த கூட்ட தொடரின் நிகழ்வாக இருந்தது.
ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், சேவைகளின் நிபந்தனைகள் மற்றும் பதவி காலம் குறித்த மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவையும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நிறைவுநாளான இன்று ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தய கிளப்புகளில் கட்டப்படும் தொகைக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- திருடப்பட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.
திருவோணம்:
ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு பைபாஸ் ரோட்டில் கடந்த புதிதாக சக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இக்கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஒரத்தநாடு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
கோவில் உண்டியலில் இருந்து திருடப்பட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
- இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது.
ஜெருசலேம்:
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்தபடி இருந்தது. இந்நிலையில் போராட்டங்களுக்கு மத்தியில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதா இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது. இங்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகள் கிடைத் தன. எதிராக 56 வாக்குகள் பதிவானது. இதற்காக மசோதா பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முன்னதாக பாராளுமன்றம் முன்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சில எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே இழுத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவை திரும்பப்பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அம்மசோதாவை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டதால் மக்களின் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.
- திருச்சி சமயபுரம் உண்டியல் எண்ணப்பட்டத்தில், ரூ.85 லட்சம், 2.5 கிலோ தங்கம் காணிக்கை பெறப்பட்டது.
- உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
திருச்சி,
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் அந்த வண்ணம் இருப்பர். இவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்கள் மூலம் தங்கள் காணிக்கைகளை செலுத்துவார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ.85 லட்சத்து 189 ரொக்கமும், 2 கிலோ 553 கிராம் தங்கமும், 2 கிலோ 837 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.