செய்திகள்

உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விமான சேவை - மத்திய மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

Published On 2018-06-23 14:38 IST   |   Update On 2018-06-23 14:38:00 IST
உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalaniswami

சென்னை:

மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டு இருப்பது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போல உதான் திட்டத்தின் கீழ் தொழில் நகரமான ஓசூரிலும் விமான சேவை அமைக்க வேண்டும். இதேபோல் நெய்வேலி விமான நிலையத்திலும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News