செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தால் தமிழகத்துக்கு பயன் இல்லை - வைகோ

Published On 2018-05-21 11:20 IST   |   Update On 2018-05-21 11:20:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் என்பதை ஆணையம் என மாற்றியதால் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். #CauveryManagementBoard #Cauveryissue #Vaiko

அவனியாபுரம்:

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி தேர்தலுக்கு பின்னர் உருவாகும் கூட்டணி பெரும்பான்மையுடன் இருந்தால் ஆட்சி அமைக்கலாம்.

ஆனால் கர்நாடக கவர்னர் அவ்வாறு செய்யாமல் பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டதால் ஆட்சி கலைந்தது.

மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதா தென் மாநிலங்களில் காலூன்ற முடியாது.

காவிரி மேலாண்மை வாரியம் என்பதை ஆணையம் என மாற்றியதால் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை. இது மத்திய அரசு செய்த மிகப்பெரிய துரோகம்.


தமிழக முதல்வர் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். கர்நாடகா புதிய அணைகள் கட்டுவது, அணை பாதுகாப்பு போன்ற வி‌ஷயங்கள் தமிழகத்துக்கு சாதகமாக இல்லை.

காவிரி விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு சென்றால் தான் முழுமையான தண்ணீர் கிடைக்கும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #CauveryManagementBoard  #Cauveryissue #Vaiko

Tags:    

Similar News