செய்திகள்

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்: தமிழிசை பேட்டி

Published On 2018-05-13 16:04 IST   |   Update On 2018-05-13 16:04:00 IST
கர்நாடகாவில் பா.ஜனதா நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #karnatakaelection #bjp

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்த ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சற்குரு மகராஜ் சங்கர பாண்டி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக தேர்தலில் நேற்று வெளியான கருத்து கணிப்பு தொங்கு சட்டசபை அமையும் என்றும், பா.ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும், கர்நாடக காங்கிரஸ் ஆட்சி திறக்க வில்லை.

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தான் காவிரிக்கு முடிவு ஏற்படும். தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 94-ம் ஆண்டு இதற்கு அனுமதி கொடுத்தது காங்கிரஸ் ஆட்சி. தி.மு.க. ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது.

அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்டெர்லைட்டுக்கு கூடுதல் நிலம் வழங்கப்பட்டது. இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு தான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது. பா.ஜ.க. விரைவில் அமைக்கும். தீப்பெட்டி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரிவிலக்கு பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #tamilisai #karnatakaelection #bjp

Tags:    

Similar News