செய்திகள்
அதிமுக வெற்றி பெற முடியாது என்பதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுகிறார்கள்- மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலை தள்ளிப்போடுகிறார்கள் என்று புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #MKStalin
புதுக்கோட்டை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் இன்று மாலை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை வந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை காமராஜர்புரம் பகுதியில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் வாங்கினார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு சிறப்பாக செயல்படாத காரணத்தினால் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீரை ரூ.5, ரூ.6-க்கு வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.
குடிநீர் பிரச்சனையை தீர்க்க தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து கரூர் மாவட்டம் மாயனூரில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீதமுள்ள அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதனால் தான் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்யும் நிலையில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எதையும் கண்டு கொள்ளாமல் கொள்ளையடிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
அ.தி.மு.க.வும், பா.ஜ.க. வும் இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்பட்டு வருகிறது என்று அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் செய்தி வெளியிட்டுள்ளது உண்மை தான். நீட் பிரச்சனை, காவிரி பிரச்சனை என எந்த பிரச்சனையாக இருந்தாலும், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசும், தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதால் அவர்கள் இரட்டை குழல் துப்பாக்கி போல்தான் செயல்பட்டு வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலை நடத்த தயங்குகின்றனர், தள்ளிப்போடுகிறார்கள். இதனால் உள்ளாட்சிக்கு வர வேண்டிய நிதி மத்திய அரசுக்கு மீண்டும் திரும்பி போகும் நிலை உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அது குறித்து எழுதினார்களா? அல்லது பதவியை காப்பாற்றுவதற்காக அந்த பிரச்சனை குறித்து எழுதினார்களா? என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews