செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஈரோட்டில் டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்.
இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி. தினகரன் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க டி.டி.வி. தினகரன் காலையிலேயே ஈரோடு வந்தார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் 11.15 மணிக்கு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.
அவரும் அவருடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். #CauveryIssue

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர்.