செய்திகள்

தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்- இளங்கோவன்

Published On 2018-04-05 10:03 IST   |   Update On 2018-04-05 10:03:00 IST
தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்று மயிலாடுதுறையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை:

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருடர்களை பிடித்தால் கூட பொதுமக்கள் விட்டு விடுவார்கள். ஆனால் சர்ச்சை கருத்துக்களை கூறிவரும் தமிழிசை, எச்.ராஜா போன்றவர்களை கண்டால் அவர்களை தாக்கமால் விடமாட்டார்கள். எனவே அவர்கள் தேவையற்ற கருத்துகளை பேசுவதை தவிர்க்க வேண்டும்.


பெரியார் சிலை உடைப்பு குறித்து அவரது பேரனான நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதை மக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். மோடியை நல்லாட்சி தரும் மன்னராக கருதி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அவர் நாட்டை கவனிக்காமல் உலகம் முழுவதும் நாடோடியாக சுற்றி கொண்டு இருக்கிறார்.

மத்திய அரசு வழங்கிய இலவச கியாஸ் இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கு மானியம் வழங்காதது கண்டிக்கத்தக்கது.

இப்போது மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்கள் தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News