செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ல் அ.தி.மு.க. உண்ணாவிரதம்

Published On 2018-03-30 06:20 GMT   |   Update On 2018-03-30 06:20 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 2-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். #ADMK #CauveryIssue
மதுரை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவித்த பிறகும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. உச்சநீதிமன்றம் விடுத்த கெடு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டக்களத்தில் இறங்க திட்டமிட்டன.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று அறிவித்தார்.

மதுரையில் 120 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த அவர் இதனை விழா மேடையில் அறிவித்தார்.


தமிழகத்தின் ஜீவாதார வாழ்வுரிமை எந்த நேரத்திலும் பறிபோகாத வகையில் எங்களது குரல் ஒலிக்கும். இதற்கு அடையாளமாக வருகிற 2-ந் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும். இந்தபோராட்டம் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதி நீர் ஒருங்கிணைப்பு குழுவையும் அமைக்கும் வகையில் இருக்கும்.

உண்ணாவிரதப்போராட்டத்தில் திரளான கட்சியினரும், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள அதேநாளில் தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News