செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண வெள்ளம் ஓடியது: வைகோ வேதனை

Published On 2017-12-29 04:36 GMT   |   Update On 2017-12-29 04:36 GMT
கங்கை வெள்ளம் போன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண வெள்ளம் ஓடியது என கோவில்பட்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தில் முடிவு எடுப்பது, அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம். ரஜினி எனக்கு மிக நெருங்கிய நண்பர். மனிதாபிமானம் உள்ளவர். அவர் அரசியல் முடிவு குறித்து 2 நாளில் தெரிவிக்கவுள்ளார். அதுவரை பொறுத்து இருக்க வேண்டும். எனவே அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கங்கை வெள்ளம் போன்று பண வெள்ளம் ஓடியது. ஆளும் அரசும், வெற்றி பெற்றவரும் வாக்குக்கு பணத்தினை கொடுத்தனர். ஆனால் தி.மு.க. பணம் கொடுக்கவில்லை. இதே நிலை நீடிக்கும் என நம்பிக்கையுடையவர்கள் ஏமாந்து போவார்கள். ஒரே ஒரு தொகுதியில் பலகோடி பணத்தினை கொண்டு புகுத்திய போது வசதியற்றவர்கள் ஏழை,எளிய மக்கள் வாங்கியது வருத்தத்தினை ஏற்படுத்துகிறது.


ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்திற்கு சவாலாக உள்ளது என்பதை உணர்ந்து எதிர்காலத்தில் மக்கள் ஜனநாயகத்தினை காப்பாற்ற முன் வர வேண்டும் என்பது எனது வேண்டுகோள். ஒக்கி புயல் வந்த போதும் பெரு வெள்ளம் வந்த போதும் விமானம், கப்பல் போகாவிட்டாலும், 3 மணிநேரம் கழித்த பிறகாவது போயிருக்கலாம். ஏன் போகவில்லை? தமிழர்கள் உயிர் போவதை பற்றிய கவலை இல்லை.

கடலில் தத்தளித்த போது அவர்களை காப்பாற்ற மத்திய அரசுக்கு மனசாட்சி இல்லை. தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுகின்றனர். 7 வருடங்கள் கழித்த பிறகு தான் நிவாரணம் என்ற சட்டத்தினை குப்பையில் போட்டு விட்டு 60 நாட்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News