தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு 29-ந்தேதி கூடுகிறது
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் வருகிற 29-ந்தேதி கூடுகிறது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டம் மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்குகிறது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகரில் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட படுதோல்வி அந்த கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.க. இன்று ஆலோசனை நடத்திய நிலையில் தி.மு.க.வும் ஆலோசனை நடத்த உள்ளது.
கட்சியின் வாக்கு வங்கி குறைந்து இருப்பதன் மூலம் கட்சியின் பலத்தை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.