செய்திகள்

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: விஜயகாந்த்

Published On 2017-11-28 13:14 IST   |   Update On 2017-11-28 13:14:00 IST
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் மனைவி பிரேமலதாவுடன் இன்று சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும் முன்பு இதை தெரிவித்தார். இது தொடர்பாக விஜயகாந்த் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் தே.மு.தி.க. ஆதரவு யாருக்கும் கிடையாது. தே.மு.தி.க. தொண்டர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.


ஆர்.கே.நகரில் வீடுவீடாக சென்று மாலை 5 மணி வரைதான் வாக்கு சேகரிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் தான் இதை எதிர்ப்பார்கள். காசு கொடுக்காதவர்கள் அதை சரி என்பார்கள்.

ஆளும் கட்சியில் உள்கட்சி பிரச்சனை நிலவுகிறது. மக்கள் நலனில் கவனம் செலுத்தவில்லை என்பது தான் உண்மை.

பள்ளி மாணவர்களின் தற்கொலை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அவலநிலையை கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News