செய்திகள்
அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, தினகரன் அணிக்கு தாவல்?: பெரம்பலூர் எம்.எல்.ஏ. திடீர் விளக்கம்
எடப்பாடி அணிக்கு ஆதரவு அளித்த வந்த ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. தினகரன் அணிக்கு தாவப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பெரம்பலூர் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ரத்தினசபாபதி.
அ.தி.மு.க.வில் மாவட்ட அவைத்தலைவர் பதவி வகித்து வரும் அவர் கடந்த மாதம் அ.தி.மு.க. (அம்மா) அணி துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு அளித்தவர்களில் ஒருவர் ஆவார்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் பிரிந்திருந்த போதிலும் எடப்பாடி அணியிலேயே நீடித்தார். இரு அணிகளும் ஒன்றாக இணைந்த பிறகு தொகுதியின் வளர்ச்சி பணிகள் மற்றும் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வந்தார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த பி.கே. வைரமுத்துவை பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நேற்று விடுவித்து அறிவிப்பு வெளியிட்டார். அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவி மணல்மேல்குடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதியின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இந்த நிலையில் எடப்பாடி அணிக்கு ஆதரவு அளித்த வந்த ரத்தினசபாபதி எம். எல்.ஏ. தினகரன் அணிக்கு தாவப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று பிற்பகலில் அது குறித்த தனது நிலைப்பாட்டை ரத்தினசபாபதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
அரியலூரில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெரம்பலூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். அவருடன் நாடாளுமன்ற துணை சபா நாயகர் தம்பித்துரை, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபில், பாலகிருஷ்ண ரெட்டி, வளர்மதி உள்ளிட்டோர் தங்கியிருந்தனர். அவர்களை பெரம்பலூர் தொகுதி எம்.பி. மருதராஜா வரவேற்றனர். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அணி ஆதரவாளராக இருந்த பெரம்பலூர் எம்.எல். ஏ. தமிழ்செல்வன் பெரம்பலூரில் முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர் தினகரன் அணிக்கு மாறக்கூடும் என பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக பேச்சு உலவுகிறது.
இது தொடர்பாக எம்.எல். ஏ. தமிழ்செல்வனை நேற்று நிருபர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை அவரை நிருபர்கள் தொடர்பு கொண்ட போது பேசினார். அப்போது அவர் நான் எடப்பாடி பழனிசாமி அணியில் தான் இருக்கிறேன்.
நேற்று அரியலூர் வந்த முதல்வருக்கு எனது ஆதரவாளர்களுடன் சென்று பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தேன். மேலும் நான் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் குடும்பத்துடன் வெளியூர் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறானது. நான் பெரம்பலூரில் எனது வீட்டில் தான் இருக்கிறேன். பொதுமக்களிடம் வீட்டில் வைத்து குறைகளை கேட்டு வருகிறேன் என்றார்.
கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது சசிகலாவுக்கு ஆதரவாகவும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராகவும் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கருத்துக்களை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.