செய்திகள்

நடிகர் கமல்ஹாசன் பற்றி கருத்து கூற விரும்பவில்லை: செங்கோட்டையன் பேட்டி

Published On 2017-07-23 13:23 GMT   |   Update On 2017-07-23 13:23 GMT
நடிகர் கமல்ஹாசன் பற்றி கருத்து கேட்டபோது, அவரை பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி:

கோபி பஸ் நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்களுடைய நோய்களை தடுப்பதற்காக சுகாதார துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவ துறையில் இந்தியாவே திரும்பிபார்க்கும் அளவிற்கு நோய்களை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்துகிறது,

கோபியில் 7 நாட்கள் பஸ் நிலையத்தில் நில வேம்பு கசாயம் வழங்கப்படவுள்ளது. இதை நோய் இல்லாதவர்களும் வாங்கி குடிக்கலாம். மேலும் அரசு மருத்துமனைகளிலும் இந்த கசாயம் கிடைக்கிறது.

அரசு மட்டும் தான் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. சேவை சங்கங்களும் முன் வந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வை விலக்கி வைக்க வேண்டும் என அமைச்சர்கள் பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளனர்.

ஊராட்சி, நகராட்சி மாநகராட்சி அரசு பள்ளிகளில் பொது தேர்வுகளை மாணவ மாணவிகள் சந்திக்கும் அளவிற்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் 10 ஆயிரம் ஆசிரியிர்களுக்கு ஆங்கில பயிற்சியும் அளிக்கப்படும்.

தமிழகத்தில் 250 பள்ளிகளில் தரம் உயர்த்துவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் ரூ.7500 சம்பளத்தில் தற்காலிக ஆசியரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலமாக தேர்வு செய்த பிறகு நிரந்தரம் செய்யப்படுவார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்து பற்றி கேட்டபோது, ‘‘கமல்ஹாசன் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை‘‘ என்றார்.

Tags:    

Similar News