செய்திகள்

ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - நிதியமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-07-03 06:11 GMT   |   Update On 2017-07-03 06:11 GMT
ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், கேளிக்கை வரி தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறினார்.



இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’திரையரங்கங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தான் எங்களின் தலையாய கடமை என நடராஜன் கூறியது வரவேற்கத்தக்கது’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News