செய்திகள்

திருநாவுக்கரசர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: மாற்றப்பட்ட காங். நிர்வாகிகள் பஸ் நிலையத்தில் உண்ணாவிரதம்

Published On 2017-06-18 11:28 IST   |   Update On 2017-06-18 12:56:00 IST
மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனத்தில் திருநாவுக்கரசின் நடவடிக்கைக்குக்கு எதிராக, மாற்றப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீ பெரும்புதூர் பஸ் நிலையத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீ பெரும்புதூர்:

தமிழக காங்கிரசில் 72 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் பெரும்பாலானவர்கள் மாற்றப்பட்டனர். ப.சிதம்பரம், தங்கபாலு ஆதரவாளர்களில் ஒரு சிலருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஸ்ரீ பெரும்புதூர் பஸ் நிலையத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சி வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வி.ஆர் சிவராமன் தலைமை தாங்கினார்.

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கூடாது என்று நிர்வாகிகள் எச்சரிக்கப்பட்டனர். அதையும் மீறி ஏராளமானவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பதவி நீக்கப்பட்ட வெளி மாவட்ட தலைவர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவியும் பங்கேற்றார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்துவும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார்.

உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தின் அருகே பல்வேறு வாசகங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளன.

Similar News