செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அரசு பா.ஜனதா கட்டுப்பாட்டில் உள்ளது: கனிமொழி எம்.பி. தாக்கு

Published On 2017-06-17 12:39 IST   |   Update On 2017-06-17 12:39:00 IST
எடப்பாடி பழனிசாமி அரசு பா.ஜனதா கட்டுப்பாட்டில் உள்ளது என்று தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு தானாக இயங்கவில்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்குவதாக ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.

தற்போது பா.ஜனதாவின் சில தலை வர்கள் இதை வெளிப் படை யாகவே ஒப்புக் கொண்டிருக் கின்றனர். இந்த அரசு சுயமாக சிந்தித்து மக்களுக்காக நடை பெறும் ஆட்சியாக தெரிய வில்லை. இது பா.ஜனதா கட்டுப்பாட்டில் தாக் உள்ளது.

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க் களுக்கு பணம் தந்த விவகாரம் பற்றி விசா ரணை நடத்தப்பட வேண் டும். கவர்னரை சந்தித்து அதற்காக மனு தரப்படும். தேவைப்பட்டால் ஜனாதி பதியை சந்திப்போம் என தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.


ஜனாதிபதி தேர்தல் குறித்து பா.ஜனதா கட்சி தற்போது தான் எதிர்க்கட்சி மற்றும் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேச தொடங்கியுள்ளது. எல்லோரும் ஒன்றுகூடி வேட்பாளரை நிறுத்துவதற்கு பிரச்சினை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை கட்டாயம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆதார் அட்டை இன்னும் அனைவருக்கும் முழுமையாக கிடைக்க வில்லை. அரசு உதவித் தொகை பெறவும், வங்கி கணக்கு தொடங்குவது போன்ற வற்றுக்கும் கட்டாயம் என கூறியுள்ளனர். ஆதார் அட்டை இல்லாதவர்களின் நிலையை மத்திய அரசு நினைத்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News