செய்திகள்
திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகையில் அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பிறகு இதுவரை 29 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர்.
இந்த வங்கி கணக்குகளில் ரூ 65 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் விபத்து காப்பீடு திட்டத்தில் இந்தியாவில் 10 கோடி பேர் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் 15.87 லட்சம் பேரும், நாகை மாவட்டத்ல் 1.73 லட்சம் பேரும் சேர்ந்துள்ளனர். ஆயுள் காப்பீடு திட்டத்தில் 3 கோடி பேர். தமிழகத்தில் 22.45 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடப்பாண்டு மத்திய அரசு ரூ. 10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தமிழக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து இருப்பார். கூடங்குளம் பிரச்சினையை அவர் ஒரு வாரத்தில் முடித்து வைத்தார்.
தமிழக முதல்-அமைச்சர் சரியாக செயல்படவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம். அவர் பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.