செய்திகள்

கடல் நத்தையை கொடுத்து மந்திரி பதவி பெற்றார்: ஜெயக்குமார் மீது மதுசூதனன் தாக்கு

Published On 2017-05-18 14:24 IST   |   Update On 2017-05-18 14:24:00 IST
சசிகலாவுக்கு கடல் நத்தையை கொடுத்து நடராஜனுடைய தயவில் மந்திரி பதவி வாங்கியவர் தான் ஜெயக்குமார் என மதுசூதனன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மதுசூதனன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

அமைச்சர் ஜெயக்குமார் என்னை விமர்சித்து உள்ளார். அவருக்கு அ.தி. மு.க. கட்சியின் வரலாறு தெரியாது.

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது அவர் சிறைக்கு சென்று விடுவார், நான் முதல்-அமைச்சர் ஆகி விடுவேன் என்று கூறி தன்னுடைய சபாநாயகர் பதவியை இழந்தவர்.

அவர் சசிகலாவுக்கு கடல் நத்தையை கொடுத்து நடராஜனுடைய தயவில் மந்திரி பதவி வாங்கியவர்.


நாங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு கருத்தும், தரம் தாழ்ந்து விமர்சித்தும் வருவதாக கூறி இருக்கிறார். அவர் ஒரு அரசியல்வாதியே கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் மதுசூதனன் நிருபர் களிடம் கூறியதாவது:-

மக்கள் விரும்பினால் அ.தி.மு.க. வின் இரு அணிகளும் இணையும். ஓ.பன்னீர் செல்வம் பக்கம்தான் மக்கள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழும். அதன் பின்னர் அந்த அணியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வருவார்கள்.

நத்தம் விசுவநாதன் குறித்து மேலிடத்தில் தவறான தகவலை தெரிவித்து தான் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சர் பதவியை பெற்றுள்ளார். அவரைப்பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News