செய்திகள்

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியுடன் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது: நாராயணசாமி

Published On 2017-04-12 05:35 GMT   |   Update On 2017-04-12 05:35 GMT
புதுவை மாநில துணை ஆளுனர் கிரண் பேடிக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது என்று முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.
சென்னை:

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி டெல்லியில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் என்னை பொறுத்தவரை யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது. புதுவை மாநில அரசு மக்கள் வளர்ச்சிக்காக நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது.



எனக்கும், புதுவை மாநில துணை ஆளுனர் கிரண் பேடிக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது. அது ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும்தான் பெரிதுபடுத்தப்படுகிறது.

புதுவை மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனாதிபதியை சந்தித்து புதுவை அரசு நிலவரத்தை எடுத்துச் சொல்லலாம் என்று சொன்னார்களே தவிர கிரண்பேடியை மாற்ற எதுவும் சொல்லவில்லை.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளின் போராட்டம் நியாயமானது. நான் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தேன்.

காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியா முழுவதும் 70 ஆயிரம் கோடி விவசாய கடன்களை ரத்து செய்தோம். அதேபோல் இப்போதும் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் கூட்டுறவு விவசாய கடன்களை ரத்து செய்துள்ளோம். வங்கி கடன்களையும் ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளோம்.

பிரதமர் மோடி விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை. விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு நிவாரணம் வழங்காதது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News