செய்திகள்
கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
கோவை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவைக்கு இன்று காலை 10.40 மணிக்கு வந்தார். அதே விமானத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் வந்தார்.
விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
இதன் பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
முந்தைய அ.தி.மு.க. வேறு. இப்போதைய அ.தி.மு.க. வேறு.
அ.தி.மு.க. தொண்டர்களின் பலம் யாருக்கு அதிகமாக உள்ளதோ, அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.