செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: செலவின பார்வையாளர் 24-ந்தேதி வருகை - லக்கானி தகவல்

Published On 2017-03-17 07:41 GMT   |   Update On 2017-03-17 07:41 GMT
ஆர்.கே.நகர் தொகுதி செலவின பார்வையாளரான அபர்ணா வில்லூரி வருகிற 24-ந்தேதி சென்னை வருகிறார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலுக்காக 256 வாக்கு சாவடிகள் அமைக்கப்படும். ஓட்டுப்பதிவுக்காக 1,024 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

தேர்தல் பணியில் 1,842 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் தவிர 307 பேர் நுண்பார்வையாளர்களாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.


ஆர்.கே.நகர் தொகுதி செலவின பார்வையாளராக அபர்ணா வில்லூரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 24-ந்தேதி சென்னை வருகிறார். அன்றே அவர் தொகுதிக்கு சென்று செலவினம் தொடர்பான பணிகளை மேற்பார்வையிடுவார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2.62 லட்சத்து 721 பேர். இதில் ஆண் வாக்காளர்கள்- 1,28,305 பேர். பெண்கள் வாக்காளர்கள் - 1,34,307 பேர். 3-ம் பாலினத்தவர்-109 பேர்.

இவ்வாறு லக்கானி கூறினார்.

Similar News