செய்திகள்
ஜனநாயக படுகொலைக்கு காவல்துறை துணை போகிறது: எச். ராஜா குற்றச்சாட்டு
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு துணை போகும் காவல்துறை செயல்பாட்டால் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என்று எச். ராஜா கூறினார்.
காரைக்குடி:
காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சபாநாயகர் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதால் தான் ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கவில்லை. அங்கு ஜனநாயக படுகொலை நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற முடிந்தது. உண்மையில் வெற்றி பெற்றது எடப்பாடி பழனிச்சாமி இல்லை. தமிழக காவல்துறை தான். அந்தளவுக்கு துணை போனார்கள்.
தற்போது தமிழகத்தில் பினாமி அரசு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்சில் அடைத்து வைத்து, தமிழகத்தில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்தேறியுள்ளது. இதற்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் நடந்து கொண்ட விதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.