செய்திகள்

ஜெயலலிதாவின் வாரிசு சசிகலா தான்: ஆதாரத்தை காட்டி பொன்னையன் பேட்டி

Published On 2016-12-17 01:30 GMT   |   Update On 2016-12-17 11:05 GMT
‘ஜெயலலிதாவின் வாரிசு சசிகலா தான்’ என்றும், அதை ஆவணத்திலேயே குறிப்பிட்டுள்ளார் என்றும் ஆதாரத்தை காட்டி அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறினார்.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 11-வது நாள் திதி நிகழ்ச்சி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொன்னையன், பின்னர் நிருபர்களிடம், “ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தினோம். 11-வது நாள் திதி நிகழ்ச்சியில் பிரார்த்தனையும், மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது” என்றார். தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு பொன்னையன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழு எப்போது கூடுகிறது?.

பதில்:- வரும் 31-ந் தேதிக்குள் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது. காலதாமதம் ஏற்பட்டால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டிய நிலை ஏற்படும்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவுக்கு கட்சியில் எதிர்ப்பு உள்ளதா?.

பதில்:- கட்சியில் எதிர்ப்பு எதுவும் இல்லை. தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என சசிகலா தான் பொதுச் செயலாளராக வர வேண்டும் என்று ஒருமித்த கருத்துடன் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக இந்த நிகழ்வுதான் நடக்கிறது. ஜெயலலிதாவுடன் நீண்ட நாள் இருந்தவர், சசிகலா. தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படுகிறார்.

கேள்வி:- ஜெயலலிதா மறைவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிவருகிறார்களே?.

பதில்:- மருத்துவ முறைப்படி அனைத்து சிகிச்சைகளும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. மருத்துவம் படித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கே இது தெரியாதா?. எதிர்க்கட்சியினர் திட்டமிட்டே வதந்தியை பரப்புகிறார்கள்.

இவ்வாறு பொன்னையன் கூறினார்.

அதன்பிறகு, அ.தி.மு.க.வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களிடம் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் பேட்டி கொடுத்து முடித்ததும் மீண்டும் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொன்னையன் மீண்டும் பேட்டி கொடுக்க காரில் வந்து இறங்கினார். அவரது கையில் காகிதம் ஒன்று இருந்தது.

அந்த காகிதத்தை காட்டியபடி பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

Similar News