செய்திகள்
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: வாசன் வலியுறுத்தல்
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரியலூர் மாவட்ட த.மா.கா. மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் அண்ணாசிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.
மாநில மகளிரணி தலைவி கன்னிகாதேவி, விவசாய அணி புலியூர் நாகராஜன், கொட்டிவாக்கம் முருகன், ஜி.ஆர். மூப்பனார், முன்னாள் எம்.பி. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கராஜன், நல்லமுத்து, மாசிலாமணி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அரசியல் லாபத்திற்காக பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.