செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முஸ்லிம் லீக் ஆதரவு: நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2016-09-21 15:14 IST   |   Update On 2016-09-22 17:16:00 IST
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முஸ்லிம் லீக் ஆதரவு அளிப்பது என்று நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:

இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவர் ஒய். ஜவஹர் அலி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி. மு.க.வுக்கு முழு ஆதரவு அளிப்பதோடு, அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்காக பாடுபடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News