செய்திகள்
அ.தி.மு.க - தி.மு.க-வில் விருப்பமனு கொடுக்க நாளை கடைசி நாள்
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க.வில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு கொடுக்க நாளை கடைசி நாளாகும்.
சென்னை:
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதி முடிவடைகிறது. புதிய உறுப்பினர்கள் 25-ந்தேதி பதவி ஏற்க வேண்டும். இதற்காக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க-வில் கடந்த 16-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளருடன் அ.தி.மு.க மேலிட பொறுப்பாளர் ஒருவர் இணைந்து தினமும் மனுக்களை வாங்கி வருகின்றனர்.
இதே போல், தி.மு.க.விலும் கடந்த 19-ந்தேதி முதல் மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.
விருப்ப மனு கொடுக்க அ.தி.மு.க -தி.மு.க.வில் நாளை கடைசி நாளாகும். அ.தி.மு.கவில் நாளை இரவு 8 மணிவரை மனுக்கள் வாங்கப்படுகிறது. தி.மு.க.வில் நாளை மாலை 5 மணிவரை மனுக்கள் பெறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்கள் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த வார்டுகள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் அ.தி.மு.க- தி.மு.க.வில் ஏராளமானோர் போட்டியிட விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.
அ.தி.மு.கவில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் தலா 350 க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளனர். தி.மு.க.வில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் 100-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்துள்ளனர். மொத்தம் 200 வார்டுகளுக்கு அ.தி.மு.க -தி.மு.க-வில் இருந்து 2500-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
இதே போல் தே.மு.தி.க, பா.ம.க., த.மா.கா., பா.ஜனதா கட்சிகளிலும் இன்று முதல் விருப்ப மனு வாங்கி வருகின்றனர்.