செய்திகள்

கடலில் மூழ்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு

Published On 2016-09-16 12:16 IST   |   Update On 2016-09-16 17:10:00 IST
கடலில் மூழ்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை, தண்டையார் பேட்டை வட்டம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பாஸ்கர் மகன் ரகுபதி, ராஜரத்தினம் மகன் ஜெகன் ஆகியோர் 13-ந்தேதி அன்று காசிமேடு பகுதியிலுள்ள கடலில் குளிக்கச் சென்ற போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ரகுபதி மற்றும் ஜெகன் ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News