செய்திகள்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: சிவகங்கையில் வைகோ பேட்டி

Published On 2016-07-01 10:07 IST   |   Update On 2016-07-01 10:16:00 IST
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

வக்கீல்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்தததை எதிர்த்து வக்கீல்கள் போராடுவது நியாயமானது இதை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வேடிக்கை பார்க்காமல் வக்கீல்களை பாதிக்காத வகையில் முழுஅளவிலான சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் தொடரும் கொலைகளால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இதில் அரசு, போலீசாரை முழுஅளவில் செயல்பட உத்தரவிட வேண்டும். மேலும் காவல் துறையில் உள்ள காலிபணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

சென்னையில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் மனிதாபிமானம் குறைந்து வருவதை காட்டுகிறது. இதற்கு காரணம் புகார் கூற செல்லும் மக்களை போலீசார் சாட்சிகள் என கூறி அலைக்கழிக்கப்படுவார்கள் என்ற பயம் உள்ளது. முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளும், பாட புத்தகங்களில் நீதி போதனைகளும் இடம் பெறும். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. அறிவியல் முன்னேற்றம் என்பது தேவைதான். ஆனால் அது பல பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது.

இத்தகைய கொலைகளுக்கு எல்லாம் காரணம் மது ஒன்று தான். எனவே தமிழகத்தில் முழுஅளவில் மதுக்கடைகளை மூட வேண்டும். 12 மணிக்கு கடையை திறப்பதால் எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க.வினரே மறைமுகமாக மது விற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், மாநில தணிக்கை குழு உறுப்பினர் கார் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News