செய்திகள்

பீனிக்ஸ் பறவை போல தே.மு.தி.க. மீண்டும் உயிர்த்தெழும்: விஜயகாந்த் பேச்சு

Published On 2016-06-09 14:50 IST   |   Update On 2016-06-09 14:50:00 IST
அடிபட்ட பீனிக்ஸ் பறவை விழித்தெழுவது போல் தே.மு.தி.க. மீண்டும் உயிர்த்தெழும் என்று விஜயகாந்த் கூறினார்.
காரைக்குடி:

தே.மு.தி.க. மாநில பிரமுகர் இல்ல திருமண விழா காரைக்குடியில் இன்று நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் விஜயகாந்த் பேசியதாவது:-

விஜயகாந்த், பத்திரிகையாளர்களை பார்த்து பயப்படுவதாக கூறுகிறார்கள். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என்னை பார்த்துதான் பத்திரிகையாளர்கள் பயப்படுகிறார்கள். சாம்பலில் இருந்து விழித்தெழும் பீனிக்ஸ் பறவை போல் தே.மு.தி.க. உயிர்த்தெழும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

சினிமாவில் கேப்டன் முதலில் வில்லன்களிடம் அடிவாங்குவார். அதன் பின்னர் அவர்களை அடித்து நொறுக்கி வெற்றி பெறுவார். அதுபோல தேர்தலில் தோல்வியடைந்தாலும் தே.மு.தி.க. மீண்டும் ஜெயிக்கும்.

கால்பந்து போட்டியில் பந்து பலரது காலில் உதைபட்டு அதன்பின்னரே கோலாக மாறும். அதுபோல தே.மு.தி.க.வும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News