செய்திகள்

தேர்தல் வெற்றி: ஜெயலலிதாவுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து

Published On 2016-05-20 10:13 IST   |   Update On 2016-05-20 10:13:00 IST
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் அ.தி.மு.க. கழகத்திற்கும், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கும் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காரைக்குடி:

தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் அ.தி.மு.க. கழகத்திற்கும், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கும் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.கழகம்-காங்கிரஸ் கூட்டணி, ஆட்சி அமைக்க கூடிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், சுமார் 100 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றது மனநிறைவை தருகிறது.

என்னுடைய சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.கழகம் 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இதற்கு காரணம் தி.மு. கழகத்தினரின் பெரும் பணியும், காங்கிரஸ் தோழர்களின் அரும்பணியும் ஆகும் என்று பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

Similar News