செய்திகள்

தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ப.சிதம்பரம் பேட்டி

Published On 2016-05-16 09:43 IST   |   Update On 2016-05-16 09:43:00 IST
தி.மு.க.– காங்கிரஸ் கூட் டணி அமோக வெற்றி பெறும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

காரைக்குடி, மே. 16–

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது சொந்த ஊரான காரைக் குடி அருகே உள்ள கண்டனூர் சிட்டாலாட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 7.05 மணிக்கு கொட்டும் மழையில் குடைபிடித்த படி வாக்குச்சாவடிக்கு வந்தார்.

பின்னர் அவர் தனது வாக்கை செலுத்திவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சட்டசபை தேர்தலில் பணப்புழக்கம் அதிகம் நடந்துள்ளது. இதை தேர்தல் கமிஷனால் தடுக்க முடியவில்லை. மக்கள் அனைவரும் தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். மழை பெய்தாலும் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. ஆட்சி அமைக்கும். கருணாநிதி 6–வது முறையாக முதல்– அமைச்சர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News