செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ப.சிதம்பரம் பேச்சு

Published On 2016-05-14 10:35 IST   |   Update On 2016-05-14 10:34:00 IST
அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, சிங்கம்புணரி, நெற்குப்பை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. 40 சதவீத பதவிகாலம் முடிவடைந்த நிலையில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் மக்கள் நலனுக்காக என்ன செய்தார்?

தற்போது இருக்கும் முதல்–அமைச்சர் எந்த மாவட்ட தலைநகரத்திற்கும் போனது கிடையாது. எந்த தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிருபர்களையும் சந்திப்பது கிடையாது.

3 முறை முதல்வராக இருந்தும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாதவர் ஜெயலலிதா. எனவே அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. தேசிய உணர்வுக்கு எதிரானது போல், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. திராவிட உணர்வுக்கு எதிரானது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News