கர்நாடகா தேர்தல்

முடிவுக்கு வந்த இழுபறி - ஜெயா நகரில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி

Published On 2023-05-13 20:40 GMT   |   Update On 2023-05-13 20:40 GMT
  • மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.
  • ஜெயா நகர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

பெங்களூரு:

ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி மற்றும் பா.ஜ.க. சார்பில் சி.கே. ராமமூர்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57 ஆயிரத்து 297 வாக்குகளை பெற்றிருந்தார்.

இதற்கிடையே, மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார். இதையடுத்து, தேர்தல் அதிகாரி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி இருக்கிறார்.

தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்கா ரெட்டி மற்றும் இதர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஜெயா நகரில் பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Tags:    

Similar News