லைஃப்ஸ்டைல்
என் சமையலறையில் டிஸ்வாஷர்

என் சமையலறையில் டிஸ்வாஷர்

Published On 2021-10-12 03:32 GMT   |   Update On 2021-10-12 03:32 GMT
பாத்திரம் தேய்ப்பதற்கு முடியாதவர்கள் மற்றும் பிடிக்காதவர்களுக்கு மிக மிகச் சுத்தமாகப் பாத்திரத்தை கழுவித்தரும் வேலையை டிஷ்வாஷர்கள் செய்கின்றனர்.
பாத்திரம் தேய்க்கும் இயந்திரங்களை (டிஷ் வாஷர்ஸ்) சமையலறையின் சொத்து என்று சொல்லலாம். சமையலை எளிதாக முடித்து விடலாம். ஆனால், பாத்திரம் தேய்ப்பதற்கு முடியாதவர்கள் மற்றும் பிடிக்காதவர்களுக்கு மிக மிகச் சுத்தமாகப் பாத்திரத்தை கழுவித்தரும் வேலையை டிஷ்வாஷர்கள் செய்கின்றனர். டிஷ்வாஷர்களை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கூடிக் கொண்டே வருகின்றது.

இவை நம்முடைய நேரம், ஆற்றல் மற்றும் மின்சாரத்தைக் குறைந்த அளவு உபயோகிப்பதால் பணத்தையும் மிச்சப்படுத்துகின்றது. நம் இந்திய சமையலில் அதிக எண்ணெய் மற்றும் மசாலாக்களை பயன்படுத்துகின்றோம். இதனால் பாத்திரங்களில் பிசுபிசுப்பு அதிகமாக இருப்பதால் அவற்றைக் கழுவி எடுப்பது என்பது மிகவும் கடினமான வேலையாகும். இதுபோன்ற கஷ்டங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற வந்திருக்கும் உயிர்காப்பான் என்று சொல்லுமளவுக்கு மிகவும் அற்புதமாக பாத்திரம் தேய்க்கும் இயந்திரங்கள் செயல்படுகின்றன. டிஷ்வாஷர்களில் சென்சார்கள் மற்றும் ரேக் சிஸ்டம் இருப்பதால் இவை பாத்திரங்களை மிகவும் சுத்தமாகவும், கிருமிகள் இல்லாதவாறும் கழுவித் தருகின்றன.

உணவுத் தட்டுகள், இனிப்பு சாப்பிட்ட தட்டுகள், சூப் கிண்ணம், கண்ணாடி டம்ளர்கள், டீ கப் மற்றும் சாஸர்கள், கத்தி, கரண்டி மற்றும் முட்கரண்டி ஆகியவற்றை வைத்துக் கொள்வது போல இட அமைப்புகள் உள்ள டிஷ்வாஷர்கள் ஏழெட்டு உறுப்பினர்கள் இருக்கும் குடும்பத்திற்கு ஏற்றவையாகும். அதிக பிசுபிசுப்புடன் இருக்கும் கடாய், அதிக அளவு மினுமினுப்பானவை, கூடுதல் உலர் தன்மையோடு இருப்பவை, அரைசுமை (ஹாஃப் லோடு), வேரியோ ஈக்கோ ப்ரீ ரின்ஸ் போன்று ஆறு கழுவும் திட்டங்களுடன் டிஷ்வாஷர்கள் உள்ளன.

அதிக பிசுபிசுப்புடன் தீவிரமாக இருக்கும் கடாய்த் தேர்வானது இந்தியப் பாத்திரங்களுக்கு ஏற்றவை. அதிகஅளவு மினுமினுப்பானவை நேரத்தை மிச்சப்படுத்துகிறது. அரை சுமை குறைவான பாத்திரங்களுக்கு ஏற்றவை. கூடுதல் உலர் தன்மையானது உலர்த்தும் செயல் திறனுக்காகவும், வேரியோ ஈக்கோ நீர் மற்றும் மின்சாரத்தின் உகந்த பயன்பாட்டிற்காகவும், ப்ரீரின்ஸ் கடுமையான கறைகளைப் போக்குவதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ள கழுவும் திட்டங்களாகும்.

சில மாடல்களில் இருக்கும் அக்வா சென்ஸார் அமைப்பானது பாத்திரங்களின் அளவிற்கேற்ப அதில் உபயோகப்படுத்தக்கூடிய நீரின் அளவை நிர்ணயிக்கின்றது.

பெரும்பாலான மாடல்கள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டதுடன், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சைல்ட் லாக் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரானிக் டிலே டைமர் என்ற அமைப்பானது நாம் விரும்பும் நேரத்தை அதில் முன்கூட்டியே பதிவு செய்து விட்டால் அது குறிப்பிட்ட நேரமானவுடன் தன்னுடைய வேலையை செய்யத் தொடங்குவதுடன் பணியின் மீதமுள்ள நேரத்தையும் காட்சிப் படுத்துகின்றது.

உங்களுடன் சமையலறையின் ஒரு சிறிய மூலையில் பொருத்தக்கூடிய வகையில் வந்திருக்கும் டேபிள் டாப் டிஷ்வாஷர்கள் மிகவும் அழகாகவும், க்யூட்டாகவும் உள்ளன. இவை நீடித்து உழைக்கக்கூடிய ஆனால், அதே நேரத்தில் இலகுரக தயாரிப்பு என்று சொல்லலாம். இவை உருவத்தில் சிறியதாக இருப்பதால் எந்த வகையான சமையலறையிலும் பொருத்தக்கூடியது.

இதுபோன்ற மாடல்களை பராமரிப்பதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் எளிது. டிஸ்வாஷர்களிலிருக்கும் இன்பில்ட் ஹீட்டர்கள் உள்ளே வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அளவிற்கு ஏற்றவாறு தண்ணீரைச் சூடு செய்கின்றது. சுடுதண்ணீரினால் கழுவப்படும் பாத்திரங்கள் மிகவும் சுத்தமாக பிசுக்குகளில்லாமல் இருக்கின்றன.

இன்வெர்ட்டர் டைரக்ட் டிரைவ் மோட்டார்களுடன் வரும் மாடல்கள் அதிக ஆற்றல்திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இயங்கும் பொழுது அமைதியாக இயக்குவதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

டிஷ்வாஷர்களில் கொடுக்கப்பட்டுள்ள ரெக்குகளை பெரிய பாத்திரங்களை வைப்பதாக இருந்தால் உயரத்திற்கு தகுந்தாற்போல் சரிசெய்து வைத்துக் கொள்ளலாம்.
Tags:    

Similar News