லைஃப்ஸ்டைல்
பக்கத்து வீட்டு நட்பும் அவசியமே

பக்கத்து வீட்டு நட்பும் அவசியமே

Published On 2021-07-02 03:34 GMT   |   Update On 2021-07-02 03:34 GMT
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் சூழலில் தான் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் அறிமுகம் மற்றும் நட்பு அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர்.
நவீன கால அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரத்தில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுடன் நட்பு பாராட்டும் மனநிலை பலருக்கும் இருப்பதில்லை. உறவினர்கள், நண்பர்கள் யாரையும் நேரடியாக சந்திக்க இயலாத சூழல் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் சூழலில் தான் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் அறிமுகம் மற்றும் நட்பு அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர். இருப்பினும் மற்றவர்களுடன் வெளிப்படையாக பழகுவதில் சிலருக்கு ஒருவித தயக்கம் இருக்கக்கூடும். அதை அகற்றி நட்பை வளர்ப்பதற்கான சில வழிகளை இங்கே காணலாம்.

அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

யாருடன் பழகுவதாக இருந்தாலும் பரஸ்பர அறிமுகம் தேவை, அதனால் மற்றவர்கள் தாமாக முன்வந்து பேச வேண்டும் என்று நினைக்காமல் நீங்களாகவே அறிமுகம் செய்து கொள்ளுங்கள். தனிப்பட்ட நபராக அறிமுகமாவதை விட குடும்பமாக அறிமுகம் செய்து கொள்வதும்தான் சிறப்பான வழி உங்களை பற்றிய தகவல்களையும் பரிமாறிகொள்ளலாம். அவர்களை சந்திக்கும் சமயங்களில் புன்னகையுடன் வணக்கம் தெரிவிப்பதோடு நலம் விசாரிப்பதும் அவசியம்.

உதவிகளை அளியுங்கள்

ஊரடங்கு காலத்தில் காய்கறிகன் மற்றும் மளிகை பொருட்களை குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே சென்று வாங்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளது. அவ்வாறு பொருட்களை வாங்க வெளியில் செல்லும் சமயங்களில் அருகில் வசிப்பவர்களின் தேவை பற்றி அறிந்து பொருட்களை வாங்கி கொடுக்கலாம். மற்ற உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் தக்க விதத்தில் அவற்றை செய்வதன் மூலமாகவும் நல்ல
நட்பு
ணர்வு உருவாகும்.

விழாக்கால நிகழ்ச்சிகள்

நமது கலாசாரத்தில் அடிக்கடி திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அருகில் வசிப்பவர்களிடம் நட்பு கொள்ள ஏற்ற வழியாக திருவிழாக்கள் அமைகின்றன. அனைவருக்கும் பொதுவான பண்டிகைகள் அல்லது முக்கியமான விழாக்களை அந்த பகுதியில் குடியிருப்போருடன் ஒன்றிணைந்து கொண்டாடலாம். அதில் போட்டி கலந்துரையாடல், நாடகம் என்று தனித்திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி பரிசுகளையும் அளிக்கலாம். அதன் மூலம் பரஸ்பர அன்பும், நட்பும் உருவாகுவதுடன் மற்றவர்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும்.

ஆதரவாக செயல்படுங்கள்

அருகில் வசிப்பர்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் போது அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அவர்களது மனஇறுக்கம் மற்றும் தடுமாற்றம் அகலும் வகையில் கனிவாக பேசலாம். உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலமாகவும், நட்பை வலுப்படுத்திக்கொள்ளலாம்.

தொடக்கத்திலேயே தொல்லையை தவிருங்கள்

பக்கத்து வீட்டினருடன் இனிமையாக பேசிப்பழகும் சூழலிலும் பிராணிகள் வளர்ப்பு, செடி வளர்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏறப்படக்கூடும். அவற்றை ஆரம்பத்திலேயே கவனித்து அவர்களுடன் வெளிப்படையாக பேசி இரு தரப்புக்கு ஏற்ற வழிமுறைகளை கடைப்பிடிக்க ஆவண செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நல்ல நட்பை இழந்து விடக்கூடிய நிலை உருவாகி விடலாம்.

சொல்வதை கவனியுங்கள்

நட்பை நல்ல நிலையில் தொடர மனம் விட்டு பேசுவது முக்கியம். அதனால் மற்றவர்கள் பேசும் போது கவனமாக கேளுங்கள். அது சலிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் கவனித்து கேட்கும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம்.

பரிசளியுங்கள்

பண்டிகை மற்றும் விஷேச நாட்களிலும் நண்பர்கள் வீட்டில் நடைபெறும் விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் மனம் கவரும் பரிசுகளையும் வழங்குங்கள். அன்புடன் பரிசுகளை அளிப்பதும் பெறுவதும் உறவுகளை வலுப்படுத்த உதவும். அதன் மூலம் உங்கள் மீது மற்றவர்கள் கொண்டுள்ள மதிப்பும் அன்பும் அதிகரிக்கும்.

Tags:    

Similar News