லைஃப்ஸ்டைல்
கொரோனாவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி?

கொரோனாவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி?

Published On 2021-05-28 07:22 GMT   |   Update On 2021-05-28 07:22 GMT
கொரோனாவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து மனநல மருத்துவ பேராசிரியர் டாக்டர். எஸ்.அருண் கூறியதாவது:-
கொரோனா தொற்று நோயின் இரண்டாம் அலை உலகளவில் குறிப்பாக இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை பெரும் அளவில் சீர்குலைத்து வருகிறது. கொ ரோனா வைரஸ் பலவித மாற்றத்துடன் நுரையீரல் மற்றுமின்றி பிற உறுப்புகளையும் பாதிக்கின்றது. நரம்பு மண்டலத்தில் ஊடுருவும் திறன் கொண்டதால் நரம்பு உளவியல் பிரச்சினைகளை அதிக அளவில் ஏற்படுகின்றன.

உளவியல் பாதிப்பு

இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 22.5 சதவீதம் கொரோனா நோயாளிகளுக்கு நரம்பு உளவியல் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில் உளவியல் சார்ந்த பிரச்சினைகளான தூக்கமின்னமை(3.4 சதவீதம்), மனப்பதற்றம்(4.6 சதவீதம்), மன அழுத்தம்(3.8 சதவீதம்), தற்கொலை எண்ணம்(0.2 சதவீதம்) மற்றும் அறிவு திறன் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மன உளைச்சலுக்கு கொரோனா வைரசின் நோய் தாக்குதல் மட்டுமின்றி இச்சமூக சூழலும் காரணமாக அமைகின்றன.

குழந்தைகளுக்கு பாதிப்பு

அதீத தூய்மை மேற்கொள்ளுதல் எண்ண சுழற்சி என்கிற மனகுறைபாடு ஏற்படுத்தியும், ஏற்கனவே அதன் பாதிப்பில் இருந்தவர்களுக்கு அதிகமாக தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தனக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று தீவிர மனப்பயத்திற்கு ஆளாகின்றன. பொருளாதார வீழ்ச்சியால் பலருடைய வாழ்வாதாரம் சரிவடைந்தும் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகி தற்கொலை எண்ணங்களை தூண்டுகிறது.

மனபாதிப்பில் இருந்து விடுபட...

வீட்டில் இருந்தே பணி செய்தல் உள்ளிட்டவைகள் நன்மை அளித்தாலும், அது நம்மை வீட்டிற்குள்ளே முடக்கி விடுவதால் சமுதாய புரிதல் கற்றல் ஆற்றல் இல்லாமல் செய்து விடுகிறது. இது மனதை பெரிய அளவு இயக்கத்தை ஏற்படுத்தி செயல் திறனை குறைத்து விடுகிறது. மது பழக்கத்திற்கு அடிமை ஆகுதலும் கணிசமான அளவு (5-10 சதவீதம்) கூடியுள்ளது.

இதற்கு கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் தனிமை உடல் மற்றும் சோர்வு ஆகியவை காரணமாக அமைகிறது. வாழ்க்கையின் ஓட்டத்தை முழுவதுமாக மாற்றிய கொரோனா நோய் உடலை மட்டுமின்றி மனதையும் பெரும் அளவிற்கு பாதித்துள்ளது. மனபாதிப்பை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும். வீட்டிலேயே பின் வரும் ஆலோசனைகளை பின் பற்றி மனபாதிப்பில் இருந்து நம்மை காத்துக்கொள்ளுவோம்.

* தனிமையை தவிர்த்தல்

* மனதில் உள்ள பாரத்தை மற்றவர்களுடன் பகிர்தல்

* கொரோனா பற்றிய செய்திகளை தவிர்த்தல்

*உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்

* புத்தகங்கள் படித்தல்

*குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல்

* இசை, கலை ஆர்வம் பயிற்சி மேற்கொள்ளுதல்

*நண்பர்களுடன் உரையாடுதல்

* நேரத்திற்கு தூங்குதல்

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News