பெண்கள் உலகம்
கொரோனா தனிமையில் பழைய காதலை நினைத்து உருகும் பெண்கள்

கொரோனா தனிமையில் பழைய காதலை நினைத்து உருகும் பெண்கள்

Published On 2020-05-28 13:18 IST   |   Update On 2020-05-28 13:18:00 IST
கொரோனா தனிமையில் முன்னாள் காதலரை நினைத்து உருகும் பெண்களுக்கு எதனால் முன்னாள் காதலர் குறித்த நினைவுகள் வருகிறது என்று இங்கே கூறப்பட்டுள்ளது
தனிமை என்பது எவ்வளவு கடினம் என்பதை இந்த கொரோனா சொல்லி தந்து வாழ்க்கையின் பல கடினமான உண்மைகளை எதிர்கொள்ளச் செய்துள்ளது. இதனால் நிறைய மக்கள் நிறைய விஷயங்களை நினைத்து யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏன் சிலர் அவர்கள் வாழ்வில் கடந்து போன விஷயங்கள் குறித்து கனவும் கண்டு வருகிறார்கள். அந்த வகையில் பார்க்கும் போது சிலர் தங்கள் கடந்த கால காதலரை நினைத்து கனவு காண்பதாக ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறது. அது எப்படி என்பதை இங்கே காண்போம்.

நீங்கள் தனிமைப்படுத்தலின் போது உங்கள் முன்னாள் காதலனைப் பற்றி கனவு காண்கிறீர்களா, காலையில் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு மனதிற்கு கஷ்டமாக தோன்றலாம். கடந்த காலம் உங்களுக்கு வசந்தம் நிறைந்ததாக இருக்கலாம். உங்கள் தனிமையை போக்க உங்க காதலன் உங்க அருகில் இருந்து இருக்கலாம். ஆனால் இப்பொழுது இந்த கொரோனா தனிமை அதை உங்களுக்கு நியாபகப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதெல்லாம் உங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று யோசிக்காதீர்கள். இந்த உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னாள் காதலரை நினைத்து கனவு காண்பதாக ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறது.

உங்கள் முன்னாள் காதலன் /காதலி குறித்து கனவு வருவது அவர்கள் உங்கள் வாழ்க்கையில் திரும்ப வர விரும்புகிறார்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இது உங்க உறவில் உள்ள ஒரு உறுதிப்பாடு சிக்கலை உண்டாக்குகிறது.

ஒருவரின் மரணம் குறித்து கனவு காண்பது நம்மை மிகவும் வருத்தமடையக் கூடிய விஷயமாக இருக்கும். அதிலும் அது உங்க முன்னாள் காதலன் பற்றிய கனவு என்றால் கண்டிப்பாக வேதனைப்படுவீர்கள். ஆனால் இந்த கனவு ஒரு சூழ்நிலையின் முடிவைக் கொடுக்கிறது. உங்க கடந்த காலத்தை விட்டு விடுங்கள் என்பதை கூறுகிறது. இது உண்மையில் நல்லது அல்லவா.

உங்க கடந்த கால வாழ்க்கையில் உங்க உறவில் ஏகப்பட்ட மோதல்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம். இப்படி உங்க முன்னாள் காதலனுடன் வாக்கு வாதம் மற்றும் மோதல்கள் போன்ற கனவு அசாதாரணமானது கிடையாது. ஒரு உறவு சமீபத்தில் முடிவடைந்து காயங்கள் புதியதாக இருக்கும்போது மட்டுமே இது நிகழ்கிறது. இந்த கனவு உங்களுக்கும் உங்க காதலனுக்கும் இடையேயுள்ள பல கவனிக்கப்படாத சிக்கல்களை ஏற்படுத்துகிறது. எனவே பல வருடங்களுக்கு பிறகும் இது ஏற்பட்டால் உங்க ஆழ்மனதில் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் முன்னாள் காதலனை திருமணம் செய்து கொள்வது போன்ற கனவு உங்கள் தற்போதைய வாழ்க்கையில் இன்னும் அர்த்தமுள்ள மற்றும் ஆழ்ந்த அர்ப்பணிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது. இதற்கு நீங்கள் இன்னும் காதலிக்கிறீர்கள் அல்லது உங்கள் முன்னாள் கூட்டாளரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய திசையை நோக்கி முன்னேற நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்பதை இது காட்டுகிறது.

உங்க முன்னாள் காதலுடன் சேருவது போன்ற கனவு, உங்க முன்னாள் காதலுடன் திரும்பி வருவது போன்ற கனவுகள் தற்போதைய உறவில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா அல்லது கடந்த கால உறவில் ஏதேனும் காணாமல் போனதா என்பதை காட்டுகிறது. ஒருவேளை நீங்கள் உங்க நிகழ்காலத்தை கடந்த காலத்துடன் ஒப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம் மட்டுமே. உங்கள் வாழ்க்கையில் அவரை அல்லது அவளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது அர்த்தமல்ல என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Similar News