லைஃப்ஸ்டைல்

அடிமையாதலில் இருந்து விடுபடுவது எப்படி?

Published On 2017-12-25 03:14 GMT   |   Update On 2017-12-25 03:14 GMT
அடிமையாதலில் இருந்து விடுபடுவதற்குக் கடுமையான, மிக நீண்ட பாதையில் பயணிக்க வேண்டும். பல நேரங்களில் அது நடக்காது எனப் பலர் நினைப்பதுண்டு.
எதற்கும் அடிமையாவது பிரச்சினைதான். அது மது, புகை போன்ற போதை வஸ்துகளோ அல்லது ஏதாவது ஒரு பழக்கமோ. அடிக்‌ஷன் என்பது நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி மீண்டும் அதிலிருந்து வெளியே வருவது அவ்வளவு சிரமமல்ல. முடியாததும் அல்ல.

பழக்கமாதல் என்பது அடிக்கடி உபயோகப்படுத்தியதால் ஏற்படும் மன ரீதியான விளைவு. அது ஓர் அன்றாட நிகழ்வாகி, பயன்படுத்தும் வரை மனதிருப்தி இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தும். அடிமையாதல் என்பது நீண்ட நாட்கள் பயன்படுத்தியதால் ஏற்படுவது. உடல் மற்றும் மனரீதியான விளைவுகள் உடனடியாக அதைப் பயன்படுத்த உங்களைத் தூண்டும். அதைப் பயன்படுத்தாமல் உங்களால் எந்த வேலையையுமே செய்ய முடியாத நிலை ஏற்படும்.

ஒரு பழக்கம் நமக்குத் தீமைகளைக் கொடுக்கக்கூடியது எனத்தெரிந்ததும், அதற்கு அடிமையான பின்னர் உடனடியாக விட்டுவிட முடியுமா? அதற்கு நாம் அடிமையாகி விட்டதனால் ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்தித்தான் விடுபட முடியும்.

அடிமையாதலில் இருந்து விடுபடுவதற்குக் கடுமையான, மிக நீண்ட பாதையில் பயணிக்க வேண்டும். பல நேரங்களில் அது நடக்காது எனப் பலர் நினைப்பதுண்டு. ஆனால், அப்படியல்ல. நீங்கள் அந்தப் பழக்கத்தை விடுவதற்குத் தயாராக இருந்தால், அதற்கான முயற்சிகளை விருப்பத்துடன் செய்தால், அது எவ்வளவு மோசமான விடுபட முடியாத பழக்கமாக இருப்பினும், இலக்கை அடைந்துவிட முடியும்.

சிலர் வலி மருந்துகளை அடிக்கடி எடுத்துக் கொள்வார்கள். அந்த மருந்தினை எடுத்துக் கொண்டால்தான் வலி தீரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பது மருத்துவத்தால் பரிந்துரைக்கப்படாத, ஏற்றுக்கொள்ளப்படாத மருந்துகளைப் பயன்படுத்துதல் அல்லது பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துதல் என்பதே ஆகும். நீண்ட நாட்களுக்கு மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் உருவாகும் விளைவுகள் அந்த மருந்துகளைப் பொறுத்தவை.

மருந்து நஞ்சாதல் என்பது மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடல் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை குறிக்கும். மயக்கம் அடைதல், அறிவாற்றல் குறைபாடு, உணர்வுகள், நடத்தை மற்றும் ஒழுக்கத்தில் பாதிப்புகள் போன்றவை ஏற்படலாம். மிகத் தீவிரமான நிலையில் கோமா எனப்படும் உணர்விழந்த நிலைக்குக்கூடச் செல்லலாம்.
Tags:    

Similar News