பெண்கள் உலகம்

தனியாக பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

Published On 2016-04-25 12:13 IST   |   Update On 2016-04-25 12:12:00 IST
தனியாக பயணம் செய்யும் போது உங்கள் உடைமைகள் அருகிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தனியாக பயணம் செய்யும் போது உங்கள் உடைமைகள் அருகிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவை மீது வைத்திருக்கும் கண் பார்வையிலிருந்து அகல கூடாது. ஏனெனில் “வணக்கம்” என்று சொல்லி முடிக்கும் முன், பொருள்கள் மாயமாய் மறைந்திருக்கும். ஆகவே எந்நேரமும் விழிப்புணர்வோடு கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

விலை உயர்ந்த நகைகளை அணிய வேண்டாம். பெண்கள் தனியாக வெளியில் செல்லும் விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்ல‍வேண்டாம். இன்னும் சொல்ல‍ப்போனால், தங்க, வைர நகைகளை அறவே தவிர்த்து, கவரிங் நகைகளையோ அல்ல‍து பிளாஸ்டிக் காலான நவீன வடிவத்தில் உள்ள‍ நகைகளை அல்ல‍து மணிகளை அணிந்து செல்ல‍வும்.

பணம் வைத்திருக்கும் கைப்பையை மிக அருகிலேயே அல்லது கைகளிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், கொண்டு செல்லும் பணத்தை ஒரே இடத்தில் வைக்காமல், அவற்றை பிரித்து, பின் பாக்கெட் அல்லது பையின் பக்கவாட்டுப் பகுதிகள் போன்ற, வெவ்வேறு இடங்களில் போட்டு வைக்க வேண்டும். ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வின்போது, அச்சூழலில் இருந்து வெளியே வருவதற்கு, இந்தப் பணம் மிகவும் உதவியாக இருக்கும்.

முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ளவேண்டும். அதுவும் முதன் முறையாக தனியாக பயணிக்கிறீர்கள் என்பது வெளியே தெரியும்படி எந்த தருணத்திலும் நடந்து கொள்ளக் கூடாது. என்ன செய்கிறோம், எங்கே செல்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பதாகவே எப்போதும் காட்டிக் கொள்ள வேண்டும். தலை நிமிர்ந்து நடந்து, திடமான குரலில் பேச வேண்டும்.

அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்து விட்டு, இருக்கைக்குத் திரும்ப வேண்டும்.

மேலும் வெளியூர்களுக்கு தனியாக செல்லும் போது பெப்பர் ஸ்பீரேவை உடன் எடுத்து செல்லுங்கள். இது ஆபத்தான சமயங்களில் உங்களை காக்கும்.

Similar News