பெண்கள் மருத்துவம்
மன அழுத்தம்

பெண்களின் மன அழுத்தமும்... தவிர்க்கும் வழிமுறையும்...

Published On 2022-05-30 06:21 GMT   |   Update On 2022-05-30 06:21 GMT
மன உளைச்சலுக்கு ஆளாகும்போது, வேலை செய்யும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதையோ அல்லது வேலையில் கவனம் செலுத்துவதையோ குறைக்கிறார்கள்.
உங்களுடைய நாளை சரியாகத் திட்டமிட்டு தொடங்குங்கள். உங்களது தேவைகளில் தெளிவாக இருங்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தினை வசதியாக அமைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. எப்போதும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இது உங்கள் வேலையில் மனம் இலகுவாகச் செயல்பட உதவும்.

இன்றைய பெண்கள் ஒரே நேரத்தில் பல பாத்திரங்களை வகிக்கிறார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் நேரத்தை ஒதுக்குவதற்குத் திணறுகிறார்கள். ஓய்வு நேரம், உடற்பயிற்சி, நட்பு மற்றும் தூக்கம் போன்றவற்றுக்கு ஒரு பெண்ணின் தினசரி அட்டவணையில் இடம் இருப்பது நல்லது.

எல்லா வேலைகளையும் தாங்களே செய்யாமல், குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளலாம். உறவுகளைப் பலப்படுத்துவது இயல்பிலேயே பெண்களின் குணம்.

மன உளைச்சலுக்கு ஆளாகும்போது, வேலை செய்யும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதையோ அல்லது வேலையில் கவனம் செலுத்துவதையோ குறைக்கிறார்கள். இது குழந்தைகளின் வளர்ப்பு, தேவைகள், படிப்பு போன்றவற்றை பாதிக்கும்.
Tags:    

Similar News