லைஃப்ஸ்டைல்
பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ற உணவுகள் எவை?

பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ற உணவுகள் எவை?

Published On 2021-09-04 03:38 GMT   |   Update On 2021-09-04 08:37 GMT
35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.
"பெண்களை அதிகமாக பாதிக்கக் கூடிய நோய் அனீமியா எனப்படும் ரத்தசோகை. இதற்குக் காரணம் இரும்புச் சத்து குறைபாடு. அதனால், இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கீரை வகைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். கூடவே வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது.

உதாரணமாக மீன் சாப்பிடும்போது அதோடு எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். உணவு சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். ஜூஸ்களிலும் கூட எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். முட்டைக்கோஸ், மாங்காய் போன்ற 'பச்சை'க் காய்கறிகளிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் . தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் உடலுக்கு நல்லது. வைட்டமின் பி- 6 மற்றும் பி- 12 குறைவினாலும் அனீமியா உண்டாகும். பி -12 குறைபாடு, சைவ உணவுகள் சாப்பிடுவோருக்கு அதிகமாக ஏற்படும். எனவே தினமும் பால் உணவுகள் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

அடுத்ததாக உடல்பருமன் பெண்களைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. இதனால் இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல்பருமன் ஏற்படுத்தக் கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

சீரகம், சோம்பு, ஓமம் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கின்றன. எனவே, ஆன்டி ஆக்ஸ்டிடென்ட்கள் அதிகமாக உள்ள திராட்சை, பீட்ரூட் போன்ற நிற காய்கறிகள் மற்றும் பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
Tags:    

Similar News